செவிலியர்கள் பற்றாக்குறை - வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த முடிவு!!

அமெரிக்காவில் இந்த ஆண்டு செவிலியர்களுக்கே கிரீன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்கள் பற்றாக்குறை - வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த முடிவு!!

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொரோனாவின் பணிச்சுமையின் காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் பணியில் இருந்து விலகி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை கலொபோர்னியாவில் மட்டும் 40000 செவிலியர்கள் பணியில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனை ஈடுகட்டும் முயற்சியில் களமிறங்கிய அமெரிக்கா தற்போது வெளிநாடுகளில் இருந்து செவிலியர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க அரசானது விளக்கமளித்துள்ளது அதில் கூறியிருப்பதாவது, கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் செவிலியர்களின் எண்ணிக்கையானது போதுமானதாக இல்லை எனவும் ஏற்கனவே பணியில் இருக்கும் செவிலியர்களும் பல்வேறு காரணங்களுக்காக பணியில் இருந்து வெளியேறி வருவதாகவும் ஆகையால் இதனை எல்லாம் ஒரு பக்க காரணமாக வைத்து தற்போது வெளிநாடுகளில் இருந்து செவிலியர்களை பணியில் அமர்த்த திட்ட மிட்டு வருகின்றோம் . இதற்காக அதிக செலவுகள் ஏற்பட்டாலும் செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக அமெரிக்க குடிமக்களின் உறவினர்களுக்கு மட்டுமே அதிக அளவிலான கிரீன் கார்டுகளை அளித்து வரும் நிலையில் தற்போது தகுதியான பணியாட்கள் மட்டுமே கிரீன் கார்டுகள் மற்றும் வீசாக்கள் வழங்கப்பட உள்ளது. அதில் இந்த முறை 2,80,000 கிரீன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் செவிலியர்களுக்கு மட்டுமே அதிக அளவிலான கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.