கலவரத்தில் ஈடுபடுவோரை பார்த்ததும் சுடுங்க! உத்தரவால் மக்கள் பீதி!

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரை, கண்டதும் சுட ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபடுவோரை பார்த்ததும் சுடுங்க!  உத்தரவால் மக்கள் பீதி!

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரை, கண்டதும் சுட ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா, தனது பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எண்ணிலடங்கா அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான விசாரணைக் குழு முன்பு ஆஜராக, ஜேக்கப் ஜூமா மறுத்ததால், நீதிமன்ற உத்தரவை மீறி விட்டதாக கூறி, ஜூமாவுக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் 15 மாத சிறை தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள், கடைகள் மற்றும் வாகனங்களை சூறையாடியதோடு, பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை கலவரம் மற்றும் வன்முறைக்கு 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், போலீசாருக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, பணியில் முழு நேரமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோசா, கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட, ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.