உக்ரைனிலிருந்து 11 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

உக்ரைனிலிருந்து 2 லட்சம் குழந்தைகள் உள்பட சுமார் 11 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து 11 லட்சம் பேர்  வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

ரஷ்யா- உக்ரைன் இடையே 2 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.  போர் மூலம் கிழக்கு உக்ரைன் பகுதிகளை இணைக்கவும், தெற்கு நகரமான கெர்சனை சுதந்திரக் குடியரசாக அங்கீகரிக்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. ஆனால் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மேற்கத்திய நாடுகள் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும் அதனை கண்டுக்கொள்ளாத ரஷ்யா அதிபர் போரை தொடர்ந்து வருகிறார். இது சர்வதேச நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது. 

இந்தநிலையில்  கருங்கடலில் ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை டிரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பல வாரங்களுக்கு பின்னர் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

போர் நடந்து வரும் நிலையில், டொனெட்ஸ்க், லூகான்ஸ் பகுதிகளில் இருந்து 2 லட்சம் குழந்தைகள் உள்பட 11 லட்சம் உக்ரைனியர்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரஷ்யா, மக்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறியுள்ளது.