நைஜீரியாவில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்...ஊழியர்கள் இறந்திருக்கலாம் என அச்சம்!!

விபத்து ஏற்பட்ட கப்பலில் பத்துக்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் இருந்ததாக ஷேபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்...ஊழியர்கள் இறந்திருக்கலாம் என அச்சம்!!

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டெல்டா மாநிலத்தில் ஷேபா ஆய்வு நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் திடீரென தீப்பிடித்ததாகவும் அதிலிருந்து கரும்புகைகள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதில் கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை என்பது குறித்து தெரியவில்லை என்கின்றனர். உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து ஏற்பட்ட கப்பலில் 10 ஊழியர்கள் இருந்ததாகவும் சேபா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த விபத்து நிகழ்ந்ததிற்கான காரணம் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.