உலகின் மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரியில் சால்மொனெல்லா கண்டுபிடிப்பு; இடக்கால உற்பத்தி தடையால் பதற்றம்:

பெல்ஜியமில் உள்ள உலகின் மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரியில் சால்மொனெல்லா பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது
உலகின் மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரியில் சால்மொனெல்லா கண்டுபிடிப்பு; இடக்கால உற்பத்தி தடையால் பதற்றம்:
Published on
Updated on
2 min read

பெல்ஜியமில் உள்ள உலகின் மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரியில் சால்மொனெல்லா பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பதற்றம் நிலவி, இடைக்காலமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாக்லெட்டிற்கே பிறப்பிடமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Barry Callebaut நடத்தி வரும் பெல்ஜியம் நாட்டின் வீஸ் பகுதியில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரி ப்ளாண்ட் இந்த வியாழக்கிழமை, சோதனையின் போது சால்மொனெல்லா பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்நிறுவன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

உலகிலுள்ள சுமார் 73 பெருந்தலைகளுக்கு ஹோல்சேலில் லிக்விட் சாக்லெட் உற்பத்தி செய்யும் பெல்ஜியமின் இந்த கிளையில், தற்போது இந்த சம்பவத்தால், அனைத்து பொருட்களும் அப்படியே ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தங்களது கிளையில் இருந்து, கடந்த ஜூன் 25ம் தேதியில் இருந்து சென்ற எந்த சாக்லெட்டும் விற்பனைக்கு அனுப்பப்ப் பட வேண்டாம் என்றும் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியமின் உணவு பாதுகாப்பு ஏஜென்சியான AFSCA, இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்த நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது. மேலும், பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யாத இந்த நிறுவனம், தங்களது இந்த பாதிக்கப்பட்ட வீஸ் கிளையில் இருந்து வெளியேறிய எந்த நோய்க்கிருமி பாதித்த சாக்லெட்டும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பது தெளிவுப்படுத்துகிறது.

பெல்ஜியத்தில் உள்ள ஆர்லோனில் இருக்கும் ஃபெரெரோ தொழிற்சாலையில் கின்டர் சாக்லேட்டுகளை உற்பத்தி செய்யும் சாக்லேட்டுகள் சால்மோனெல்லாவால் மாசுபட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த பயம் வருகிறது.

சுவிஸ் குழுவான Barry Callebaut உணவுத் துறையில் உள்ள பல நிறுவனங்களுக்கு கோகோ மற்றும் சாக்லேட் தயாரிப்புகளை வழங்குகிறது, இதில் ஹெர்ஷே, மொண்டலெஸ், நெஸ்லே அல்லது யூனிலீவர் போன்ற தொழில் நிறுவனங்களும் அடங்கும்.

இந்தத் துறையில் உலகின் நம்பர் ஒன்னாக விளங்கும் இந்த கிளை, அதன் வருடாந்திர விற்பனை, கடந்த 2020-2021 நிதியாண்டில் 2.2 மில்லியன் டன்களாக இருந்தது. மேலும் கடந்த நிதியாண்டில், சூரிச்சில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட குழுமம், 7.2 பில்லியன் ஃபிராங்குகளுக்கு 384.5 மில்லியன் சுவிஸ் ஃபிராங்குகளை அதாவது 402 மில்லியன் டாலர்கள் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்த குழுவில் 13,000 க்கும் மேற்பட்ட மக்கள் பணியாற்றுகின்றனர், உலகளவில் 60 க்கும் மேற்பட்ட தயாரிப்பு தளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் பயங்கரமானதாகக் கருதப்படும் பாக்டீரியாக்களில் ஒன்றான சால்மொனெல்லா மீண்டும் புழக்கத்தில் வந்ததாகக் கூறப்படும் நிலையில், மக்களுக்கு பெரும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com