துருப்பிடித்த நிலையில் ஈபிள் கோபுரம் - 60 மில்லியன் யூரோ செலவில் சீரமைப்பதாக தகவல்..!

உலக அதிசியங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் பிரான்சு நாட்டு தலைநகரான பாரீசில் அமைந்துள்ளது. 

துருப்பிடித்த நிலையில் ஈபிள் கோபுரம் - 60 மில்லியன் யூரோ செலவில் சீரமைப்பதாக தகவல்..!

உலக அதிசியங்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோபுரம் 1063 அடி உயரம் கொண்டவையாக உள்ளது. இவை 19 ஆம் நூற்றாண்டின் பொழுது GUSTAVE EIFFEL என்பவரால் முழுவதுமாக இரும்பினை கொண்டு கட்டப்பட்டது தான் இந்த ஈபிள் கோபுரம். 

இந்த ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்காக ஒவ்வொரு வருடமும் தவறாது 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சொல்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த ஈபிள் கோபுரம் துருப்பிடித்து இருப்பதாக சொல்லப்பட்டது தொடர்ந்து இதற்கான பழுதுபார்ப்பு தேவை எனவும் தகவல் வெளிவந்த படி உள்ளது. 

கோபுரத்தை பழுதுபார்ப்பதற்கு முன்னதாக வெறுமென வர்ணம் பூசப்படுவதாகவும் நிபுணர்களின் ரகசியா அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாரிசீல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியை ஒட்டி 60 மில்லியன் யூரோ செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து இது போன்று வர்ணம் பூசப்படுவது, 20 வது முறை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும் ஈபிள் கோபுரத்தை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் ஆனது இது குறித்து உடனடி கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.