மக்களின் மன உறுதியை சிதைக்க...பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷியா திட்டம் - அதிர்ச்சி தகவல்!!

உக்ரைனில் கைப்பற்றிய நகரங்களில் மக்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை வழங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் மன உறுதியை சிதைக்க...பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷியா திட்டம் -  அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் மீது தொடர்ந்து 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு இணையாக உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால் இரு தரப்பு மோதலில் பல உயிர்கள் பரிபோய் உள்ளது.

இருப்பினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.
  
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேசமயம் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷிய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரஷியா உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் உள்ள மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல  திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் மன உறுதியை சிதைக்கவே பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷிய உளவு அமைப்பின் ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.