ரஷ்யாவின் மொஸ்க்வோ கப்பலை தரைமட்டமாக அழித்த உக்ரைன்... ஆயுத உதவிகளை நிறுத்த அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை பிரிவு தலைமைக் கப்பலான  மொஸ்க்வோ உக்ரைன் படைகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு ஆயுத உதவிகள் செய்யக் கூடாது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ...

ரஷ்யாவின் மொஸ்க்வோ கப்பலை தரைமட்டமாக அழித்த உக்ரைன்... ஆயுத உதவிகளை நிறுத்த அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனைக் கைப்பற்றும் விதமாக ரஷ்ய தொடங்கிய போர் 50 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில் மரியபோல் நகரை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக முயன்று வருகிறது. அந்நகரின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் வீசி தாக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் மொஸ்க்வோ கப்பல் உக்ரைன் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டது. அமெரிக்கா அளித்த ஆயுதங்களின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, ஆயுத உதவிகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மோஸ்க்வோ கப்பலுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ரஷ்யா தங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டை தீவிரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.