உக்ரைனுடனான போரில் வியூகத்தை மாற்றிய ரஷ்யா.. முழு வேகத்துடன் தாக்குதல் நடத்த முடிவு!!

உக்ரைனுடனான போரின் வியூகத்தை மாற்றியுள்ள ரஷ்யா, மரியுபோல் நகர் மீது முழு வேகத்துடன் தாக்குதல் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

உக்ரைனுடனான போரில் வியூகத்தை மாற்றிய ரஷ்யா.. முழு வேகத்துடன் தாக்குதல் நடத்த முடிவு!!

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய நிலையில் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை.

கெர்சன் நகரை மட்டுமே கைப்பற்றியதாக கூறிய நிலையில் கீவ் மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்தது. இடையே புச்சா படுகொலைகள் பிரச்சினையால் ரஷ்யா மீது சர்வதேச அளவில் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து தனது போர் வியூகத்தை மாற்றியது ரஷ்யா. கீவ் பகுதியில் இருந்த படைகளை கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நகர்த்தியது.

மரியுபோல் நகரைக் கைப்பற்றினால் டான்பாஸ் எனப்படும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் கிரிமீயாவுடன் இணைத்து விடலாம் என்ற திட்டத்துடன் இடையில் உள்ள மரியுபோல் நகருக்கு ராணுவம் குறி வைத்துள்ளது.

அந்த நகரம் கடந்த ஏழு வாரங்களாக ரஷ்யப் படைகளின் முற்றுகையின் கீழ்தான் உள்ளது. ஆனால், தற்போது நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்ய படைகளை தொடர்ந்து எதிர்க்கும் அளவிற்கு ஆயுதங்கள் இல்லை என்பதால் இன்றைய போரே இறுதிப் போராக இருக்கும் என்று மரியுபோலில் உள்ள உக்ரைன் ராணுவ படைப்பிரிவு  முகநூலில் பதிவிட்டுள்ளது. தாங்கள் பின்தள்ளப்பட்டு விட்டதாகவும், சிலருக்கு மரணம், சிலருக்கு சிறை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் மரியுபோலை கைப்பற்ற முழு வேகத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது ரஷ்யா.