உக்ரைன் போர் எதிரொலி : ரஷிய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை!!

உக்ரைன் போர் எதிரொலி : ரஷிய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை!!

ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்த இங்கிலாந்துக்கு பதிலடியாக இங்கிலாந்து விமானங்கள் ரஷிய வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த இரண்டு நாட்களாகவே ரஷியா கடுமையான போர் தொடுத்து வருகின்றது. இதன் எதிரொலியாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் ரஷியாவிற்கு பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தின் இந்த முடிவால் கோபமடைந்த ரஷியா, அவர்களுக்கு தக்க பதிலடி தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.  

அதாவது, இங்கிலாந்தில்  பதிவு செய்யப்பட்ட எந்த விமானங்களும் ரஷியாவில்  தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ கூடாது என ரஷியா தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு வான்வெளியை மூடியது ரஷியா. 

மேலும், பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கூறிய நிலையில் ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது.