ரஷ்யா: தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்.. 5 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி..!

பள்ளி வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார்..!

ரஷ்யா: தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்.. 5 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி..!

தனியார் பள்ளி:

ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள இசெவ்ஸ்க் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு:

இன்று காலை இப்பள்ளிக்குள் திடுதிப்பென நுழைந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பள்ளியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தற்கொலை:

இதில் 5 சிறுவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் 2 பாதுகாவலர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தற்கொலை செய்து கொண்டார். 

போலீசார் விசாரணை:

இதையடுத்து வளாகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.