சிறுவனுக்காக பள்ளிக்கூடம் செல்லும் ரோபோ!!

ஜெர்மனியில் 7 வயது சிறுவனுக்காக பள்ளிக்குச் செல்லும் அவதார் ரோபோ.

சிறுவனுக்காக  பள்ளிக்கூடம் செல்லும் ரோபோ!!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சிறுவனான ஜோசுவாமார்டிங்லி கடுமையான உடல்நல கோலாறுகளால் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த சிறுவன் கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாகன் கழுத்துப்பகுதியில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் இருப்பதாக அவரது தாய் சிமோனி கூறியுள்ளார்.

இந்த வகையான உடல் உபாதைகளால் அவர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ பள்ளிக்கு சென்று சிறுவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது.

ஜெர்மன் மாணவர் அவதார் ரோபோ மூலம் தனது ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதாக இருக்கின்றது.

ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுகிறது. வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான்.