சரக்கு ஏற்றி செல்லும் ரயில்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள்!!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் ஆண்டுகளுக்கு ஆண்டு  திருட்டு சுமார் 160 சதவீதம் அதிகரித்து வருவதாக ரெயில் நிறுவனம் புகார் அளித்துள்ளது

சரக்கு ஏற்றி செல்லும் ரயில்களை கொள்ளையடித்த கொள்ளையர்கள்!!

வளர்ந்த நாடான அமெரிக்காவில் கொள்ளைக்கு பஞ்சம் இல்லை என தற்போது தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் சரக்கு ரயில்கள் கொள்ளை போவதாக அந்த நாட்டின் மிகப்பெரிய ரயில் நிறுவனமான யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சரக்கு ரயில்கள் உள்ள கண்டெய்னர்களில் பூட்டை உடைத்து விட்டு அதில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் ஆண்டுகளுக்கு ஆண்டு திருட்டு 160 சதவீதம் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அரசு வக்கீலுக்கு யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனமானது புகார் அளித்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கைது செய்யப்பட்டு அவர்கள் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனமானது தெரிவித்துள்ளதாக சி.என்.என். கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.