இலங்கையில் மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை - ஒரு லிட்டருக்கு ரூபாய் 100 உயர்வு : பொதுமக்கள் அவதி..

இலங்கையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை - ஒரு லிட்டருக்கு ரூபாய் 100 உயர்வு : பொதுமக்கள் அவதி..

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடும் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் உள்ளிட்டவற்றை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் போதியளவு எரிபொருள் இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில்  நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய் அதிகரித்து 470 ரூபாய்க்கும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் அதிகரித்து 550 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் அதிகரித்து 520 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.