
விளையாட்டு பூங்காக்களுக்கு செல்ல யாருக்குத் தான் பிடிக்காது? அங்கிருக்கும் வித்தியாசமான விளையாட்டுகளை விளையாடவும், வித விதமாக உணவுகள் சாப்பிட்டு, பல வகையான போட்டோக்கள் போட்டு, சமூக வலைத்தளங்கள் போட்டோ வெள்ளம் உருவாக்க அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால், யாராவது அங்கு நடந்த பிரச்சனைகளை வைத்து செய்திகளில் வர விரும்புவார்களா? அதுவும், உயிரை பணயம் வைத்து பயங்கரமான விளையாட்டுகளிக் விளையாடும் அளவிற்கு யாருக்கும் தைரியம் கூட இருந்திருக்காது. ஆனால், இயந்திர கோளாறு காரணமாக ஒரு ரோலர் கோஸ்டர், அந்தரத்தில் அப்படியே நின்றுள்ளது.
37 டிகிரியில் 50 மீட்டர் உயரம்:
ஸ்பெயின் நாட்டு மாட்ரிட்-இல், பிரபல பொழுதுபோக்கு பூங்காவான பாக் டி அட்ராக்சியோனெஸ் (Parque de Atracciones) -இல், கடந்த வியாழன், ஒரு பெரும் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 பயணிகள் கொண்ட நேரம் பார்த்து, அந்த பூங்காவின் மிகப்பெரும் ரோலர் கோஸ்டரான, அபிஸ்மோ, அந்தரத்தில் அப்படியே நின்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக, சுமார் 50 மீட்டர்கள் அதாவது 160 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில், அப்படியே நின்ற அந்த ரோலர் கோஸ்டர், சுமார் ஒரு மணி நேரம் வரை சீரமைக்க முடியவில்லை. இதனால், அதில் பயணித்த பயணிகள் அப்படியே காத்திருந்தனர். அப்போது ஸ்பெயினில், கடும் வெயில் காரணமாக, சுமார் 37 டிகிரீ செலிசியஸ் வெயில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தராத்திரியில் அந்தரத்தில் காத்திருப்பு:
தன்னைச் சுற்றியுள்ள அனைத்து விளையாட்டுகளும் மூடப்பட்டு, அங்கு வந்த அனைத்து பார்வையாளர்களும் போன பிறகும், தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தவித்து வந்தவர்களை, ஒரு மணி நேரம் கழித்து, ஊழியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இரவு 9 மணிக்கு,சரியாக பூங்காவை மூடும் நேரம் இந்த கோளாறு நடந்ததாகத் தெரிகிறது. மணிக்கு 65 கி.மீ முதல் 105 கி.மீ வேகத்தில், செல்லும் இந்த ரோலர் கோஸ்டர், இந்த பூங்காவின் சிறப்பு என அழைக்கப்படுவதற்கு காரணம், அதன் வேகமும் உயரமும் தான். அதுவே இன்று பெரும் பாதகமாக அமைந்தது, அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.