உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோ வெளியிடு: அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா...

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றியுள்ளர். அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோ வெளியிடு: அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா...

 அந்த வீடியோவில் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றினார். இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்பு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார். உடல்நல குறைவு காரணமாக அய்மன் அல்-ஜவாஹிரி உயிரிழந்ததாக கடந்த ஆண்டு இறுதியில் செய்திகள் வெளியாகின. ஆனால் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இதனை உறுதி செய்யவில்லை.

அதே வேளையில் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பால் வெளியிடப்பட்ட வீடியோவில் அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றினார். வீடியோவின் உண்மை தன்மையை அமெரிக்கா உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.