6 வருடங்களாக கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை - விடுதலை கொடுத்த இளைஞர்!!

முதலையின் கழுத்தில் இருந்த டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

6 வருடங்களாக கழுத்தில் டயருடன் அவதிப்பட்ட முதலை - விடுதலை கொடுத்த இளைஞர்!!

இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம்  பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் முதலை ஒன்றின் கழுத்துப் பகுதியில் டயர் ஒன்று சிக்கியுள்ளது. இதனால் முதலை வளரும் போது அதன் கழுத்துப் பகுதி இறுக்க கூடும் எனவும் இதனால் முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர்.

முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த நிலையில் , முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த 35 வயதான  டிலி என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இறையாக வைத்து, முதலையை பிடித்துள்ளார். அதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்தார். இதனை தொடர்ந்து முதலையை மீட்டு பத்திரமாக மீண்டும் ஆற்றில் விட்டதாக சொல்லப்படுகிறது.