குரங்கம்மை-பெருந்தொற்றாக அறிவிப்பது குறித்து - உலக சுகாதார அமைப்பு இன்று முடிவு

குரங்கம்மை நோயை பெருந்தொற்றாக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று முடிவெடுக்க உள்ளது.

குரங்கம்மை-பெருந்தொற்றாக அறிவிப்பது குறித்து - உலக சுகாதார அமைப்பு இன்று முடிவு

ஆப்பிரிக்காவுக்கு வெளியே சுமார் 40 நாடுகளில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வேகமான பரவல் மற்றும் அதிக உயிரிழப்பு இல்லை என்றாலும் சர்வதேச பாதுகாப்புக்காக பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கலாமா என்பது குறித்து இன்று முடிவெடுத்து அறிவிக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  

ஏனென்றால் கொரோனா மற்றும் எபோலா போன்ற தொற்றுகளுக்கு செய்யப்பட்ட அத்தகைய அறிவிப்பு, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் நிதியுதவியை விரைவுபடுத்த உதவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.