கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்... இன்று ஆலோசிக்கிறது உலக சுகாதார அமைப்பு... 

கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் - இன்று ஆலோசிக்கிறது உலக சுகாதார அமைப்பு

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்... இன்று ஆலோசிக்கிறது உலக சுகாதார அமைப்பு... 

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. தடுப்பூசி குறித்து அனைத்து தரவுகளையும் பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்பித்து விட்ட போதிலும், அங்கீகாரம் வழங்குவது தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.