கியூபா: ஒரே ஒரு மின்னல் வெட்டு.. பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு..!

பற்றி எரியும் நெருப்பில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 122 பேர் மாயம்..!

கியூபா: ஒரே ஒரு மின்னல் வெட்டு.. பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு..!

கியூபா எண்ணெய் கிடங்கில், மூன்றாவது டேங்கிலும் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.  வெள்ளிக்கிழமை மின்னல் தாக்கியதால், கியூபாவின் மடசனஸ் நகர எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து மற்றொரு எண்ணெய் கிடங்கிற்கும் தீ பரவிய நிலையில், தற்போது மூன்றாவது டேங்கும் பற்றி எரிகிறது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 122 பேர் காணாமல் போயினர். பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்த மெக்சிகோ, வெனிசூலா நாட்டு தீயணைப்பு வல்லுநர்கள் உதவி வருகின்றனர். மடசனஸ் மக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.