உலகின் வறண்ட நிலத்தில் பூத்துக் குலுங்கும் ஊதா நிற பூக்கள்..!

உலகின் வறண்ட நிலத்தில் பூத்துக் குலுங்கும் ஊதா நிற பூக்கள்..!

அட்டகாமா பாலைவனம்:

சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் பூத்து குலுங்கும் பூக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகின் வறண்ட நிலம் என்று வரையறுக்கப்பட்ட இடம் தென் அமெரிக்காவின் சிலி பகுதியில் உள்ள அட்டகாமா பாலைவனம்.

15மி.மீ விடக் குறைவான மழை:

சராசரி மழை அளவு ஆண்டுக்கு 15 மில்லி மீட்டரை விடக் குறைவு. சில இடங்களில் மழை பெய்யாமலேயே இருக்கும். இந்த பாலைவனம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குவது வழக்கம்.

பூத்துக்குலுங்கும் ஊதா பூக்கள்:

அந்த வகையில் இந்த ஆண்டு பூத்துக் குலுங்கி வருகிறது. பாலைவன மணலில் வண்ணமயமான ஊதா பூக்கள் பூத்து குலுங்குவது ஊதா போர்வையால் மூடப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது.

Blooming desert: Chile announces a new ‘flowering desert’ national park in the Atacama region, the driest desert in the world pic.twitter.com/1EC1jkSBnr

— Reuters (@Reuters) October 4, 2022