உத்தரபிரதேச மக்களை பற்றி விமர்சிப்பதா? - நிதியமைச்சருக்கு பிரியங்கா காந்தி பதிலடி!!

உத்தரபிரதேச மக்களை விமர்சிக்க வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மக்களை பற்றி விமர்சிப்பதா? - நிதியமைச்சருக்கு பிரியங்கா காந்தி பதிலடி!!

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின் அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பட்ஜெட் தொடர்பான விமர்சனத்திற்கு இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்து பேசினார். இதனை வரவேற்ற நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்திலிருந்து ஓடிப்போனவருக்கு உ.பி வடிவிலான பதிலையே அளித்துள்ளதாக பாராட்டினார்.

இந்தநிலையில் நிர்மலாவின்  பேச்சுக்கு பதிலடி கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மக்களுக்கென பட்ஜெட்டில் ஒரு சலுகையும் அறிவிக்காத போது, அம்மக்களை விமர்சிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநிலத்தின் மொழி, பேச்சு வழக்கு, கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி மக்கள் பெருமையே கொள்வதாகவும் கூறியுள்ளார்.