பருவநிலை மாற்ற உச்சிமாநாடு... 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்...

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் கிளாஸ்கோவில் 2 நாட்கள் நடைபெற்ற பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

பருவநிலை மாற்ற உச்சிமாநாடு... 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்...

இங்கிலாந்தில் அதிக மக்கள் தொகை கொண்ட 4-வது நகரும், ஸ்காட்லாந் தின் துறைமுக நகருமான கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்று  உரையாற்றினார். பின்னர் அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் .  

முன்னதாக இந்திய வம்சாவழியினர் வழங்கிய வழியனுப்பு நிகழ்வில்  பிரதமர் மோடி பங்கேற்று அவர்களுடன் உரையாடினார். கிளாஸ்கோவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள், குழந்தைகள் , பெண்கள் என அனைவரிடமும் பிரதமர் பரிவுடன் விபரங்களை கேட்டறிந்தார்  அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆட்டோகிரப்பும் போட்டு கொடுத்தார். இதையடுத்து விமான நிலையத்தில் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்விலும் திரளான இந்தியர்கள் பங்கேற்றனர். 

பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கிடையே உலகத் தலைவர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை-நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அப்போது நிலையான வளர்ச்சிக்கான வழிகள் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.