ஆப்கன் நிலைக்கு பொறுப்பேற்று ஜோபைடன் பதவி விலக வேண்டும்... அதிபர் ட்ரம்ப்

ஆப்கானிஸ்தானின் நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் பதவிவிலக வேண்டும் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கன் நிலைக்கு பொறுப்பேற்று ஜோபைடன் பதவி விலக வேண்டும்... அதிபர் ட்ரம்ப்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகளை அதிபர் ஜோபைடன் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அவர்களின் அராஜகப்போக்கு எல்லை மீறி வருகிறது.

இதற்கு  உலக தலைவர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில் படைகளை திரும்ப பெற்றதற்கு சற்றும் கவலைப்படவில்லை என்றும், நாட்டை காப்பாற்ற ஆப்கான் ராணுவம் போராட வேண்டும் எனவும் அதிபர் ஜோபைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று ஜோபைடன் பதவிவிலக வேண்டும் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.