பாக்.உயரியல் பூங்காவில் விலங்குகளுக்கு குளிரூட்டல்...! ஏன் தெரியுமா?

பாக்.உயரியல் பூங்காவில் விலங்குகளுக்கு குளிரூட்டல்...! ஏன் தெரியுமா?

பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விலங்குளை காப்பாற்றுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பாகிஸ்தானின் லாகூர் மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் வெப்பத்தைத் தணிக்க கூடுதல் தங்குமிடங்கள், மின்விசிறிகள் மற்றும் பனிக் கட்டிகள் ஆகியவை விலங்குகளின் கூண்டுகளில்  வைக்கப்பட்டுள்ளன.

விலங்குகளை வெப்ப அழுத்தத்திலிருந்து பாதுகாப்பது முக்கியம் என்றும், தீவிர நிலைமைகளை சமாளிக்க அவர்களுக்கு கூடுதல் தாதுக்கள் மற்றும் கூடுதல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குனர், கிரண் சலீம் கூறினார்.