போலியோ, காலரா தொற்று நோய்கள் உக்ரைனில் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம்!

போலியோ, காலரா தொற்று நோய்கள் உக்ரைனில் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம்!

ராணுவ தாக்குதலில் உருக்குலைந்து வரும் உக்ரைனில், கொரோனா மட்டுமல்லாமல் போலியோ, காலரா உள்ளிட்ட மற்ற பிற தொற்று நோய்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக அளவில் ஒப்பிடும்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெறும் அளவிற்கு அங்கு கொரோனா தடுப்பூசியும் போடப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்போது போரினால் உக்ரைனின் சுகாதாரத்துறை முடங்கியுள்ள நிலையில் தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.