பிரதமர் மோடி அழைப்பை ஏற்ற போப் பிரான்சிஸ்... இந்தியா வர ஒப்புதல்...

பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதற்கு போப் பிரான்ஸிஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலி சென்றடைந்தார். 

பிரதமர் மோடி அழைப்பை ஏற்ற போப் பிரான்சிஸ்... இந்தியா வர ஒப்புதல்...

பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸையும் சந்தித்து பேசினார். அப்போது வெள்ளியில் செய்யப்பட்ட மெழுகுவர்த்தி தாங்கியை பிரான்சிஸ்க்கு மோடி பரிசளித்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது பருவ நிலை மாற்றம், கொரோனா உள்ளிட்ட  பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அப்போது இந்தியாவுக்கு வரும்படி பிரான்சிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும், போப்பும் அதனை ஏற்றுக்கொண்டு வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவிற்கு கடைசியாக கடந்த 1999ம் ஆண்டு, அப்போதைய போப் ஆண்டவராக இருந்த 2ம் ஜான் பால்  டெல்லி வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால்  போப் ஆண்டவரின் வருகை மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.