சாலைப் போக்குவரத்தை முடக்கிய போராட்டக்காரர்களை அகற்றி வரும் - காவல்துறை!

சாலைப் போக்குவரத்தை முடக்கிய போராட்டக்காரர்களை அகற்றி வரும் - காவல்துறை!

நீதிமன்ற உத்தரவையடுத்து கனடா - அமெரிக்கா இடையிலான சாலைப் போக்குவரத்தை முடக்கி வைத்திருந்த போராட்டக் காரர்களை காவல்துறை அப்புறப் படுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் கனடா முழுமைக்கும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவை சாலை மார்க்கமாக இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஆர்பாட்டக்காரர்கள் மறித்தனர்.

இதனால், கடந்த சில நாட்களாக வர்த்தகத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில், பாலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்ட வர ஒண்டாரியோ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை குவிக்கப்பட்டு பாலத்தில் இருந்த போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா கனடா இடையிலான சாலைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.