நீல நிறகண்கள்! பொன்னிறத்தில் முடி! பார்க்கவே அழகாக இருக்கு -  குழந்தையை 50,000 டாலருக்கு விற்க்க சொல்லி தாயை வற்புறுத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வயது குழந்தையை 50,000 டாலர் அதாவது 3 கோடிக்கு தனக்கு விற்குமாறு கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நீல நிறகண்கள்! பொன்னிறத்தில் முடி! பார்க்கவே அழகாக இருக்கு -  குழந்தையை 50,000 டாலருக்கு விற்க்க சொல்லி தாயை வற்புறுத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வால்மார்ட் முன்னதாக பரிசோதனைக்காக ஒரு பெண் தனது ஒரு வயது குழந்தையோடு நின்றதாக சொல்லப்படுகிறது. அவ்வப்போது அவ்வழியாக வந்த 49 வயதான ரெபெக்கா டெய்லர் என்ற பெண்மணி குழந்தையை கண்டு மிகவும் அழகாக உள்ளது. அதனை 50,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் 3 கோடிக்கு தனக்கு விற்குமாறு குழந்தையின் தாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்மணி குழந்தையின் நீல நிறகண்கள் மற்றும் பொன்னிற முடி பார்க்கவே அழகாக இருப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி விலை பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.

அக்குழந்தையின் தாய் முதலில் அவர் விளையாட்டாக பேசுவதாக நினைத்து அதனை கண்டு சிரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டெய்லரோ நீண்ட நாட்களாக தான் இப்படி ஒரு அழகான குழந்தையை வாங்கவேண்டும் என இருந்ததாகவும், தற்போது தனது காரில் 25,000 டாலர் மட்டுமே இருப்பதால் அந்த விலைக்கு கொடுத்து விடுமாறும் தனது கையில் ஆணை பத்திரம் இருப்பதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு குழந்தையை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறும் கூறியிருக்கிறார். அந்த பெண் மற்றொரு பெண்ணுடன் வந்திருந்ததால் பயந்துபோன குழந்தையின் தாயார் அங்கேயே நீண்ட நேரம் நின்றிருக்கிறார்.