அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் கல்லீரலில் இயந்திரத்தை கொண்டு ஆட்டொகிராஃப் போட்ட மருத்துவர்!

விஷேச இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சையில் நோயாளியின் கல்லீரலில் இன்ஷியலை எழுதியது மருத்துவ தரப்பினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் கல்லீரலில் இயந்திரத்தை கொண்டு ஆட்டொகிராஃப் போட்ட மருத்துவர்!

பொதுவாக நமது பெயரின் இன்ஷியலை மேஜை போன்ற இடங்களில் எழுதி மகிழ்வது வழக்கம்.இங்கு மருத்துவர் ஒருவர் விசித்திரமாக யாரும் முயற்ச்சி செய்யாத வகையில் நோயாளியின் கல்லீரலில் இன்ஷியலை பொறித்து விட்டு அதற்காக மன்னிப்பும் தெரிவித்து இருக்கிறார்.இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் அந்த மருத்துவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் பிர்மிங்ஹாம் நகரில் அமைந்திருக்கும் ராணி எலிசபெத் மருத்துவமனையில் கல்லீரல் பிரிவில் 12 ஆண்டுகளாக பிரம்ஹால் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு வயது 57 ஆக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டின் போது அதே மருத்துவமனையில் நோயாளிக்கு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கல்லீரலில் இன்ஷியல் பதிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அதனை புகைப்படமாக எடுத்து மருத்துவ  நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி கேள்விகளை எழுப்பியுள்ளார்.இது குறித்து நிர்வாகம் விசாரித்த போது அதே நோயாளிக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பிரம்ஹால் என்ற மருத்துவர் இதனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஒப்புக்கொண்ட அந்த மருத்துவரானவர் இந்த செயலை மேலும் ஒரு நோயாளிக்கு செய்திருப்பதாக தெரிவித்தார்.அவர் argon beam machine என்ற கருவியை பயன்படுத்தி இதனை செய்ததாகவும் அதற்காக மன்னிப்பும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரம்ஹால் தனது மருத்துவர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.இருப்பினும் அவர் மீது மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த விசாரணையின் போது அந்த மருத்துவருக்கு 5 மாத காலங்கள் சஸ்பெண்ட் செய்து 10000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த தண்டனை போதாது என கருதிய மருத்துவ கவுன்சில் உயர்நீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் பிரம்ஹாலுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என தெரிவித்து அவரின் மருத்துவர் உரிமத்தினை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளார்.இவர் செய்த செயலினால் நோயாளிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் போனாலும் அவர் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.இப்படிப்பட்ட செயல்களினால் பொதுமக்கள் மருத்துவ துறை மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை கெடுப்பது போன்று உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.