மகிந்த ராஜபக்ச கைது செய்ய உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

இலங்கையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச-வை கைது செய்ய உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச கைது செய்ய உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு ஆளும் அரசை காரணம் காட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு மக்களின் போராட்டம் விஷ்வரூபம் எடுக்க மக்களின் கோபத்துக்கு பயந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே சில தினங்களுகு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து மக்களிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மகிந்த ராஜபக்சே தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்பட 7 பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கான சதியில் ஈடுபட்டதாகவும் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.