2022 புத்தாண்டை வான வேடிக்கைகளுடன் வரவேற்ற ஆஸ்திரேலியா மக்கள்....

உலகின் முதல் நாடாக நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்ற நிலையில், ஆஸ்திரேலியாவும் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்றது.

2022 புத்தாண்டை வான வேடிக்கைகளுடன் வரவேற்ற ஆஸ்திரேலியா மக்கள்....

கொரோனா பரவலுக்கு இடையே 2022 புத்தாண்டை கட்டுப்பாட்டுடன் கொண்டாட அனைத்து நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்த நிலையில், அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 2022-ஐ மக்கள் ஆரவாரத்துடன் குரலெழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு 2022 புத்தாண்டு பிறந்தது. சிட்னி கோலாகலமாக நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்துகொண்டு புத்தாண்டை வான வேடிக்கையுடன் வரவேற்றனர். இதனால் வானமெங்கும் வர்ண ஜாலமாய் காட்சி அளித்தது.

இதனிடையே இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும், இரவு 11.30 மணிக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் புத்தாண்டை வரவேற்கவுள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா தமது புத்தாண்டை வரவேற்கிறது.