சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசாம்!!

தெருக்களில் உள்ள சிகரெட் துண்டு குப்பைகளை எடுத்து வருவதற்கு ஸ்வீடனில் காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசாம்!!

ஒவ்வொரு ஆண்டின் போதும் உலகளவில் இரண்டு பில்லியன் டன்களுக்கும் அதிகமாக கழிவுகள் உற்பத்தியாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வரும் கழிவுகளில் சிகரெட் துண்டுகளின் பங்களிப்பு தான் அதிகம் என கூறுகின்றனர். இந்த சிகரெட் துண்டுகளை அகற்றும் பணியில் ஒரு ஸ்வீடிஷ் நிறுவனம் ஈடுபட்டுள்ள செயலை கண்டு அனைவரும் வியப்படைந்த நிலையில் தற்போது அவை இணையத்திலும் வைரலாகி வருகிறது.

சிகரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரத்தில் காகங்கள் எடுத்து வந்து போடும் ஒவ்வொரு சிகரெட் துண்டிற்கும் சில நிலக்கடலைகளை அதற்கு பரிசாக வழங்கப்படும் என குறைந்த விலையில் தெருக்களை சுத்தம் படுத்த கார்விட் க்ளீனிங் என்ற நிறுவனமானது இந்த முயற்ச்சியில் இறங்கியுள்ளது. 

அதிகரித்து கொண்டே வரும் சிகரெட் துண்டுகளை சார்ந்த கழிவுகள் மூலம் உருவாகும் சிக்கலை சமாளிப்பதற்காக இந்த நிறுவனமானது தரமான ஒரு வழியை கண்டறிந்து அதனை செயல்படுத்தும் நோக்கில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்டார்ட்- அப் நிறுவனமானது அதிக கவனத்தை பெற காரணமாக இருப்பது அவர்கள் இதனை அடைய எடுத்து வரும் முயற்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியானது படிப்படியான செயல்முறையே, முழுவதுமான பயிற்சிக்கு பின் காகங்கள் ஸ்வீடன் நாட்டின் சோடர்டால்ஜி நகரில் சிகரெட்கள் துண்டுகளை சேகரிக்கும் பணியினை தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.