ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் தளபதி....எதற்காக?!!

ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் தளபதி....எதற்காக?!!

ஐக்கிய அரபு அமீரக அதிபரை பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி சந்தித்து பேசியுள்ளார். 

சந்திப்பு:

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக அசிம் முனிரி சமீபத்தில் பொறுப்பேற்றார்.  இதனையடுத்து அவர் அமீரகத்துக்கு வருகை புரிந்துள்ளார்.  அபுதாபியில்  ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதி அசிம் முனிரை வரவேற்று பேசினார். 

பேச்சுவார்த்தை:

அப்போது ஐக்கிய அரபு அமீரக அதிபர் புதிய ராணுவ தளபதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பாதுகாப்பு துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயரிய கௌரவம்:

ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் நட்பு நாடுகளின் மூத்த அதிகாரிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் நாட்டின் இரண்டாவது உயரிய கௌரவமான ஆர்டர் ஆஃப் தி யூனியன் விருதை பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கு ஷேக் முகமது வழங்கியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   அரசுக்கு எதிரான போராட்டம்..... பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...