நிதிச்சிக்கல் காரணமாக - வட்டிக்கு கடன் வாங்கிய பாகிஸ்தான்!!

கடும் நிதிச்சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான் மிக அதிக வட்டி கொடுத்து 100 கோடி மதிப்பிலான டாலர்களை கடனாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதிச்சிக்கல் காரணமாக  -  வட்டிக்கு கடன் வாங்கிய பாகிஸ்தான்!!

வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு வட்டிக்கு பாகிஸ்தான் அரசு புதிதாக கடன் திரட்டியதாக சொல்லப்படுகிறது.  பாகிஸ்தானின் அன்னிய செலாவணி பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை தற்காலிகமாக சமாளிக்க இத்தொகை பெறப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் கூறியுள்ளன.

சவுதி அரேபியாவிடம் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன் 300 கோடி டாலர்களை கடனாக பெற்ற பாகிஸ்தான் அதில் 200 கோடி டாலர்களை செலவளித்துவிட்டது. தற்போது அன்னியச்செலாவணி நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு மீண்டும் கடன் வாங்கியுள்ளது.