பாலியல் குற்றங்களுக்கு காரணம்... பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை கருத்து..

பாலியல் குற்றங்களுக்கு காரணம் பெண்கள் அணியும் ஆடையே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

பாலியல் குற்றங்களுக்கு காரணம்... பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை கருத்து..
பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் ஆடையே காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமரின் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. 
 
கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து ஏற்கெனவே ஒரு முறை சர்ச்சை கருத்தை கூறி வம்பில் மாட்டிக் கொண்டவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 
 
தற்போது மீண்டும் இதேபோன்றதொறு கருத்தை கூறி வம்பில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார். அதாவது ஆண்கள் ஒன்றும் "ரோபோக்கள்" அல்ல என கூறிய அவர், மெல்லிய ஆடையில் பெண்களை பார்க்கும் போது, பாலியல் உணர்வால் தூண்டப்பட்டுவதாகவும், அதில் சிலர்  பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
 
இது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, தற்போது சமூக வலைதளங்களில் பிரதமர் இம்ரான் கானை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.