பயங்கரவாதிகளால் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பாக்.  

பாகிஸ்தானில், சீன பொறியார்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான்  ஒப்புக்கொண்டுள்ளது.

பயங்கரவாதிகளால் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட பாக்.  

பாகிஸ்தானில், சீன பொறியார்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான்  ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் Pakhtunkhwa மாகாணத்தில் புதிதாக தாசு தாம் என்ற அணைக்கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த 14ம் தேதி பேருந்து சென்றபோது, திடீரென குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் இதனை பயங்கரவாத தாக்குதல் என குற்றஞ்சாட்டிய சீனா, 15 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை விசாரணைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடந்த விபத்து எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில்  சீன சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்  அது பயங்கரவாத தாக்குதல் என ஒப்புக்கொண்டு,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.