தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மீது மருத்துவ வரி விதிக்க அதிரடி உத்தரவு...

கனடாவில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்குமாறு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மீது மருத்துவ வரி விதிக்க அதிரடி உத்தரவு...

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி படைத்துக் கொண்டு வருகிறது.மேலும் இந்த வைரஸானது டெல்டா காமா போன்ற வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது.கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மூன்றாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதற்கான காரணமாக இருப்பது தென்  ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமிக்ரான் தொற்றாகும்.இதற்கிடையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஒமிக்ரானிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றனர்.இதனால் உலக மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக ஆய்வுகள் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் நிராகரித்து வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு மருத்துவ வரி விதிக்க மாகாண அரசு முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது.எனவே உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அந்த மாகாண அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அந்த மாகாணத்தில் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.சுமார் 13 சதவீதம் பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளமால் உள்ளனர். அவர்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதற்கு மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்க முடிவு செய்துள்ள மாகாண பிரதமர் பிராங்கோயிஸ் லெகால்ட் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில் “தடுப்பூசியின் முதல் டோஸ் பெறாதவர்கள் வரி செலுத்த வேண்டும். கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில தியாகங்களைச் செய்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு இது நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.