12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்ட oppo மற்றும் Xiomi நிறுவனம்...

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்களான oppo மற்றும் Xiomi ஆகியவை சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது ...

12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்ட oppo மற்றும் Xiomi நிறுவனம்...

இந்தியாவில் செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையில் சீன நிறுவனங்களாக oppo மற்றும் Xiomi ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக தொடர்ச்சியான புகார்கள் வெளிவந்த நிலையில், கடந்த டிசம்பர் 21ம் தேதி நாடு முழுவதுவம் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் இந்த இரு நிறுவனங்களும், வெளிநாடுகளில் உள்ள தங்களது நிறுவனங்களுக்கு 5ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணத்தை  காப்புரிமை எனக் கூறி உரிய ஆவணங்கள் இன்றி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் வெளிநாடுகளில் இருந்து கடனாக பெற்றதற்கு உரிய வரி செலுத்தாமல் இந்நிறுவனங்கள் 1400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதையும் வருமானவரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு, வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக கடன் பெற்றது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செல்போன் உதிரிபாகங்களை வரி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பியது என சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.