அய்யோ.. 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை.. மோதினா பெரிய பள்ளம் உருவாகுமாம்..? எது மேல் தெரியுமா?

3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை நாளை நிலவின் மீது மோதுகிறது.

அய்யோ.. 3 டன் எடை கொண்ட விண்வெளி குப்பை.. மோதினா பெரிய பள்ளம் உருவாகுமாம்..? எது மேல் தெரியுமா?

பல்வேறு உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன.

இப்படி விண்வெளியில் சுழன்று வரும் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது. அதன்படி அந்த குப்பைகள் நாளை நிலவின் மீது மணிக்கு 9 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் மோதுவதால் 33 அடி முதல் 66 அடி வரையில் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.