ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் சூழல்  

அமெரிக்காவின் நடப்பாண்டு கிரீன் கார்டு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் வீணாகக்கூடிய நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் சூழல்   

அமெரிக்காவின் நடப்பாண்டு கிரீன் கார்டு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் வீணாகக்கூடிய நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக பார்க்கப்படுவது கிரீன் கார்டு. இதனை வழங்குவதில், நாடுகளுக்கான ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த ஒதுக்கீட்டு கட்டுப்பாட்டு முறையினால், அமெரிக்காவில் பணியாற்றும், பெரும்பாளான இந்தியர்களுக்கு ‘கிரீன் கார்டு’ கிடைக்காமல் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை பெறுவதற்கான வழிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் விளைபாக இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் முடிவை மாற்றி தங்கள் கவனத்தை கனடா பக்கம் திருப்பியுள்ளனர்.

இதன் விளைவாக அமெரிக்காவில் நடப்பாண்டுக்கான 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 கிரீன் கார்டு ஒதுக்கீட்டில், தற்போது வரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தான் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கிரீன் கார்டு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்டுகள் வீணாகக்கூடிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.