கள்ளச்சாரயம் குடித்து விட்டு ரோட்டில் உறங்கியபடி உயிரிழந்த 5 பேர்....

பீகாரில் கள்ளச்சாரயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு.

கள்ளச்சாரயம் குடித்து விட்டு ரோட்டில் உறங்கியபடி உயிரிழந்த 5 பேர்....

பீகார் மாநிலமான நாளந்தா மாவட்டத்தில் சோட்டா பஹாரி கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாரியம் அருந்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும், கள்ளச்சாராயம் குடித்த ஐந்து பேரும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள தெருக்களிலேயே படுத்து உறங்கியுள்ளனர்.அதில் சிலர் விடிந்த பின்பும் கண் விழிக்கவில்லை என அவர்களின் குடும்பத்தை சேர்ந்தோர் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

சந்தேகமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்களில் சிலர் தூக்கத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் கள்ளச்சாராயம் குடித்து விட்டு 5 பேர் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.