20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு..!

டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமானது ஒமிக்ரான்..!

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு..!

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, தற்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்க தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டிருப்பதால், மோசமான ஒன்று என விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக, அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார். இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது என்றும், இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.