அமெரிக்காவில் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்..!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவருக்கு புதிய வைரஸ் பாதிப்பு..!

அமெரிக்காவில் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்..!

உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ், அமெரிக்காவிலும் நுழைந்து விட்டது. ஆப்பிரிக்க நாடில் இருந்து கலிபோர்னியா திரும்பி வந்த ஒருவருக்கு, இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நபர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் என்றும், லேசான அறிகுறிகள் இருப்பதையே அவர் தெரிவித்ததாகவும், மருத்துவர் ஃபாசி கூறியுள்ளார். அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என, அமெரிக்க மக்களை வெள்ளை மாளிகை வலியுறுத்தி உள்ளது.