மனைவியின் தலையை துண்டித்து - தெருவில் நடந்து வந்த நபர் : வைரலாகும் விடீயோ!

ஈரானில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வந்த நபரின் செயலை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

மனைவியின் தலையை துண்டித்து - தெருவில் நடந்து வந்த நபர் : வைரலாகும் விடீயோ!

விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி தனது இளம் வயதுடைய அதாவது 17 வயதான மனைவியின் தலையை துண்டித்து தெருவில் நடந்து வருவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்ந்து தற்போது அந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோ ஈரான் நாட்டில் வரலானது தொடர்ந்து போலீசார் அதனை ஆய்வு செய்து மோனா ஹெய்டாரி என்ற 17 வயதான பெண்ணின் தலை என்பதை உறுதி செய்துள்ளனர். அந்த பெண் வசித்து வந்த ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் என்ற இடத்தில் சோதனையை காவல்துறையினர் நிகழ்த்தி உள்ளனர்.

அவ்வப்போது அப்பகுதியில் மறைந்து இருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணையை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வழக்கு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத்தலைவர் என்சிஹ் கசாலி பாராளுமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த சம்பவங்கள் பற்றி தடுப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாக்க சட்டங்களை சீர்திருத்த வேண்டும் எனவும், பெண்களின் திருமணத்திற்கான வயதினை சட்டப்பூர்வமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஈரான் நாட்டில் 2020 ஆம் ஆண்டின் போது தனது மகளின் தலையை துண்டித்து கௌரவ கொலை செய்த தந்தைக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.