ஒரே மாதத்தில் மூன்று முறை ஏவுகனை சோதனை நடத்திய வடகொரியா!!

ஒரே மாதத்தில் 3வது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே மாதத்தில் மூன்று முறை ஏவுகனை சோதனை நடத்திய வடகொரியா!!

ஒரே மாதத்தில் 3வது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில், வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து இரு ஏவுகணை சோதனைகளை அந்நாடு பரிசோதித்து ராணுவ பலத்தை காட்டியிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் ஒரு ஏவுகணையை வடகொரியா பரிசோதித்திருப்பதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

இந்த ஏவுகணை எங்கு பரிசோதிக்கப்பட்டது, சோதனை வெற்றியானதா உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது.