அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி மீண்டும் வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி சோதித்து பார்த்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி மீண்டும் வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை!

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கடந்த 2019 ஆ ம் ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தார்.அதற்கு பதிலாக அவர் தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.மேலும் இது குறித்து அப்போதைய அமெரிக்காவின் அதிபரான டிரம்புடன் நடத்திய பேச்சு வார்த்தையானது தோல்வியில் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது.

மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பிறகு தான் பொருளாதார சம்மந்தப்பட்ட தடைகளை நீக்க முடியும் என டிரம்ப் திட்ட வட்டமாக கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக சொல்லப்பட்டது.அமெரிக்காவிடம் ஒப்புக் கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுதங்களை தொடங்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்து வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா தென்கொரியாவின் எதிர்ப்புகளை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக ஒலியைபோல் 5 மடங்கு வேகமான ஏவு கணையை 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி பரிசோதித்து பார்த்ததாக வடகொரியா அறிவித்தது.அதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் வடக்கு பியாங்கன் மாகாணத்தில் 2 ஏவு கணைகள் கடந்த 14-ந்தேதி ஏவி பரிசோதிக்கப்பட்டன. 11 நிமிட இடை வெளியில் இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. அதிகபட்சமாக 36 கி.மீ. உயரத்துக்கு சென்ற அந்த ஏவுகணைகள் 430 கி.மீ. தூரம் பாய்ந்து கடலில் விழுந்தன” என்று கூறப்பட்டுள்ளது.