நோபல் பரிசு பெற்ற டெஸ்மண்ட் டுட்டு காலமானார்... கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர்...

தென் ஆப்ரிக்காவில் சமூக ஆர்வலரும்,அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான 60 வயதான டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். 

நோபல் பரிசு பெற்ற டெஸ்மண்ட் டுட்டு காலமானார்... கருப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவர்...

ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியவர் டெஸ்மண்ட் டுட்டு. கருப்பின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இவர், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் ஆதரவு அளித்து வந்தார்.

தென் ஆப்ரிக்காவில் இனப் பிரிவினை கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். அவரது செயல்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தன. வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார். எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கையர், வறுமை, இன பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.  

இவர் 1990களில் புரோஸ்டேட் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கேப் டவுன் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த டெஸ்மண்ட் டுட்டு, நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல்உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.