இந்தியாவை பற்றிய மோசமான கருத்துகள்... நியூசிலாந்து யூடியூப் பிரபலத்துக்கு தடை...

நியூசிலாந்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் இந்தியாவுக்குள் நுழைய தடை

இந்தியாவை பற்றிய மோசமான கருத்துகள்... நியூசிலாந்து யூடியூப் பிரபலத்துக்கு தடை...
நியூசிலாந்தை சேர்ந்த கர்ல் எட்வர்ட் ரைஸ் என்ற யூடியூப் பிரபலம், இந்தியாவுக்குள் நுழைய ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்தை சேர்ந்த கர்ல் எட்வர்ட் ரைஸ், கர்ல் ராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்தியா உள்பட பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு, தமது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். டெல்லியை சேர்ந்த மனீஷாவை திருமணம் செய்து கொண்ட இவர், இந்தியாவை பற்றி மிகவும் மோசமான வகையில் கருத்துகளை உருவாக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். 
சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த கர்ல் எட்வர்ட், விசா விதிகளை மீறி தொழில் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ல் எட்வர்ட் இந்தியாவிற்குள் நுழைய உள்துறை அமைச்சகம் ஓராண்டு தடை விதித்துள்ளது.
 
இதனிடையே, விசா விதிகளின் படி இந்தியாவை விட்டு வெளியேறிய கர்ல் எட்வர்ட்டிற்கு ஐ.எஸ்.ஐ. உடனான தொடர்பு இருப்பதால், இந்திய விசா மறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.