எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்று பயணம் செய்து அமெரிக்கா புறப்பட்டார் நேன்சி பிலோசி:

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என அந்நாட்டு பிரதிநிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்று பயணம் செய்து அமெரிக்கா புறப்பட்டார் நேன்சி பிலோசி:

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட 4 ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று தைவான் சென்றார். சீனாவில் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அவருக்கு தைவான் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

எதிர்ப்பை மீறி சுற்றுப்பயணம்:

இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெலோசி, கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு, சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆளுமையை உறுதி செய்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க: தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா... சீனாவை சீண்டிய சபாநாயகரின் பேச்சு!

தைவான் அதிபர் சாய் இங்கவென்னை சந்தித்த நான்சி பெலோசி:

அதனைத் தொடர்ந்து தைவான் அதிபர்  சாய் இங்கவென்னை சந்தித்த பெலோசி, முன்னெப்போதையும் விட தற்போது தைவானுடனான அமெரிக்காவின் ஒற்றுமை முக்கியத்துவமானது என கூறினார். மேலும் தைவானின் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு சவால்களை எதிர்கொண்டாலும் அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை தைவான் உலகிற்கு நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார். 

அதிகாரிகள் ஆலோசனை:

முன்னதாக  நான்சி பெலோசி தைவான் வந்ததை விரும்பாத சீனா, அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில்  21 ராணுவ விமானங்களை தைவான்  வான் எல்லையில் பறக்கவிட்டுள்ளது. மேலும் தைவானை தண்டிக்கும் விதமாக மணல் ஏற்றுமதி செய்வதை இன்று முதல் நிறுத்தி கொள்வதாக சீனா அறிவித்துள்ளது. 

பயணத்தை முடித்து புறபட்ட நான்சி:

இதனிடையே தைவான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நான்சி பெலோசி புறப்பட்டார். அவரை தைவான் உயரதிகாரிகள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர்.